/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கட்டடக்கலை தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
/
கட்டடக்கலை தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 01, 2024 03:27 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கட்டடக்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை கட்டடத் தொழிலாளர் நல வாரியம் முன்பு நடந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் விசுவநாதன், பொதுச் செயலாளர் சந்திரசேகரன், துணை பொதுச்செயலாளர் அந்தோணி, பொருளாளர் கந்தன் தலைமை தாங்கினர்.
ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம்,கவுரவ தலைவர் அபிஷேகம் கண்டன உரையாற்றினர்.
போராட்டத்தின்போது, சமவேலை,சம ஊதியம் என்ற அடிப்படையில் பெண் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நலவாரிய அலுவலகத்தில் ஊழியர்களை அதிகரித்து காலத்தோடு நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் கட்டட சங்க நிர்வாகிகள் முத்துவேல், ஞானவேல், பாலன்,ராஜகுமாரி,கோடீஸ்வரன்,ராமு,பாலகிருஷ்ணன்,நடராஜன், பிரபு,அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

