தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பேயுடன் டின்னர் சாப்பிட நீங்க ரெடியா... புதுச்சேரி களைகட்டும் ஹாலோவீன் திருவிழா

பேயுடன் டின்னர் சாப்பிட நீங்க ரெடியா... புதுச்சேரி களைகட்டும் ஹாலோவீன் திருவிழா

பேயுடன் டின்னர் சாப்பிட நீங்க ரெடியா... புதுச்சேரி களைகட்டும் ஹாலோவீன் திருவிழா


UPDATED : அக் 31, 2026 07:21 PM

ADDED : அக் 31, 2026 07:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 07:21 PM ADDED : அக் 31, 2026 07:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பேய் இருக்கா... இல்லையா? என்ற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும். பேயுடன் சேர்ந்து சாப்பிடத் தயாரா? என்ற கேள்வியைக் கேட்டால் கொஞ்சம் திகிலாகத்தானே இருக்கும்.. உலகம் முழுவதும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படும் ஹாலோவீன் திருவிழா, புதுச்சேரியிலும் இந்த ஆண்டு களைகட்டியது.

கல்லறைத் திருநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கும் இந்தக் கொண்டாட்டம், ஒயிட் டவுன் முதல் ஆரோவில் வரை விதவிதமான அலங்காரங்களுடனும் வித்தியாசமான விருந்துகளுடனும் களைகட்டியுள்ளது.

குறிப்பாக, உணவகங்களுக்குள் நுழைந்தவர்களுக்கு உணவு வகைகளைவிட அங்கே சுற்றித் திரிந்த பேய் வேடங்கள்தான் முதலில் கண்ணில் படுகின்றன. பிரெஞ்சு கட்டடக் கலையை பிரதிபலிக்கும் பிரபல பிரெஞ்சு உணவகம் ஒன்றுக்குள் நுழைந்தால் திகில்தான். சுவர்களில் சிலந்தி வலைகள், ஆங்காங்கே மங்கலான வெளிச்சத்தில் ஒளிரும் மெழுகுவர்த்திகள், மூலைக்கு மூலை மிரட்டும் பூசணிக்காய் மனிதர்கள் என உணவகமே அமானுஷ்ய உலகமாக மாறியிருக்கிறது.

இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், உணவக ஊழியர்கள் முதல் வாடிக்கையாளர்கள் வரை பலரும் டிராகுலா, வாம்பயர், ரத்தக் காட்டேரி, ஜோக்கர் என விதவிதமான திகில் வேடங்களில் வலம் வந்தனர். வழக்கமாக, சார்... என்ன சாப்பிடுறீங்க? என்று கேட்கும் உணவக ஊழியர்கள், பேய் வேடத்தில் வந்து உணவு பரிமாறினால் எப்படி இருக்கும்?

சார்... ரத்தச் சர்பத் வேணுமா? மண்டை ஓட்டு பர்கர் வேணுமா? என்று கேட்டால், சாப்பிட வந்தவர்களுக்கே ஒரு நிமிடம் குலை நடுங்கிவிடாதா? பயத்தையும் ரசனையையும் கலந்து பரிமாறிய இந்த வித்தியாசமான விருந்தில் பங்கேற்றவர்கள், உணவை ரசித்ததுடன் திகில் அனுபவத்தையும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஒயிட் டவுனில் இப்படியென்றால், ஆரோவில்லில் இன்னொரு ரகம் அங்குள்ள உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகளில் ஹாலோவீன் கொண்டாட்டம் இயற்கைச் சூழலோடு இணைந்து வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தியது.

மரங்களுக்கு நடுவே மங்கலான வெளிச்சம்... பின்னணியில் ஒலிக்கும் திகிலுாட்டும் இசை... நள்ளிரவில் எரியும் நெருப்பு... அதைச் சுற்றி அமர்ந்து பயங்கரக் கதைகளைப் பகிர்ந்துகொள்ளும் இளைய தலைமுறையினர் என ஆரோவில் உணவகங்கள் அனைத்தும் திகில் விருந்தின் கொண்டாட்டக் களமாக மாறி இருக்கின்றன.

வழக்கமான உணவகச் சந்திப்புகளிலிருந்து மாறுபட்டு, நண்பர்களுடன் பேய்க் கதைகள் பேசியபடியே உணவருந்திய அனுபவம் இளைஞர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

அகால மரணமடைந்தவர்களின் ஆன்மாக்களை மகிழ்விப்பதுடன், மற்றவர்களை வேடிக்கையாகப் பயமுறுத்தும் மரபுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஹாலோவீன் திருவிழா, புதுச்சேரியில் இந்த ஆண்டும் புதுமையான கொண்டாட்டமாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை..

புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் இந்தக் கொண்டாட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பேய் வேடங்கள், வித்தியாசமான உணவு அலங்காரங்கள், திகிலுாட்டும் இசை என ஒவ்வொன்றையும் ரசித்து மகிழ்கின்றனர். என்னதான் பேய் வேஷம் போட்டிருந்தாலும், கடைசியில் எல்லோருக்கும் வேண்டியது ஒரு நல்ல உணவும், மறக்க முடியாத அனுபவமும்தானே.. பேயுடன் சேர்ந்து செல்பி எடுத்துவிட்டு டின்னர் சாப்பிட நீங்கள் ரெடியா...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us