தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேருக்கு ‘குண்டாஸ்’

கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேருக்கு ‘குண்டாஸ்’

கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேருக்கு ‘குண்டாஸ்’


UPDATED : அக் 31, 2026 07:21 PM

ADDED : அக் 31, 2026 07:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 07:21 PM ADDED : அக் 31, 2026 07:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உருளையன்பேட்டை பகுதியில் ஆட்டோ டிரைவரை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள 4 பேர் மீதும் ஒரே நேரத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை சரிசெய்யும் பொருட்டு, தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுப்படும் ரவுடிகள் மற்றும் நபர்கள் மீது போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட உப்பனாறு வாய்க்கால் மேம்பாலம் மீது ஆனந்த் என்ற ஆட்டோ டிரைவர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

விசாரணையில் மதுபான பாரில் நடந்த தகராறில் ஆளை மாற்றி கொலை செய்ததாக, உருளையன்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சாரதி (எ) தமிழரசன், 23; சாந்தோ (எ) விஷ்ணு, 22; மதியரசன் (எ) காளியப்பன், 24; மற்றும் ரோடியார்பேட்டை முருகசாமி நகரைச் சேர்ந்த சக்தி (எ)சக்திவேல், 22; ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில், சாரதி, விஷ்ணு, காளியப்பன், சக்தி ஆகியோர் மீது பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ரெயின்போ நகரில் நடந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கும் உள்ளது.

இதையடுத்து, தொடர் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக உருளையன்பேட்டை போலீசார் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுதது, சாரதி, விஷ்ணு, காளியப்பன், சக்தி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து அதற்கான ஆணையை சிறையில் அதிகாரிகளிடம் நேற்று வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us