/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாசி மகம் தீர்த்தவாரியில் சுவாமிகளுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்க ஏற்பாடு

ADDED : பிப் 21, 2024 08:43 AM
புதுச்சேரி : மாசி மகத்திற்கு வரும் சுவாமிகளுக்கு, 23ம் தேதி இரவு சாரம் மாசி மகம் வரவேற்பு குழு சார்பில், பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் வரும் 24ம் தேதி மாசி மக தீர்த்தவாரி நடக்கிறது.
இதில் கலந்து கொள்வதற்காக 23ம் தேதி இரவு 8:00 மணிக்கு, செஞ்சி ரங்கநாதர், மயிலம் சுப்ரமணியசுவாமி, மேல்மலையனுார் அங்காளம்மன் உள்ளிட்ட சுவாமிகள் புதுச்சேரி வருகின்றனர்.
மாசி மகம் வரவேற்பு குழு சார்பில், சாரம் அவ்வை திடலில் சுவாமிகளுக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில், கவர்னர் தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.மாசி மகம் தீர்த்தவாரியில் பங்கேற்று திரும்பும் தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு, வரும் 27 ம் தேதி, சாரம் சித்தி புத்தி விஜய கணபதி கோவிலில், மாசி மகம் வரவேற்பு குழு சார்பில் கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் வீதி உலா நடக்கிறது. 28ம் தேதி சிறப்பு அபிேஷக ஆராதனையுடன், வழியனுப்பு விழா நடக்கிறது.
ஏற்பாடுகளை மாசிமக வரவேற்பு குழு செய்து வருகிறது.