sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரூ.4.34 கோடியில் செயற்கை பவளப் பாறை திட்டம் துவக்கம்: புதுச்சேரி, காரைக்காலில் மீன் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு

/

ரூ.4.34 கோடியில் செயற்கை பவளப் பாறை திட்டம் துவக்கம்: புதுச்சேரி, காரைக்காலில் மீன் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு

ரூ.4.34 கோடியில் செயற்கை பவளப் பாறை திட்டம் துவக்கம்: புதுச்சேரி, காரைக்காலில் மீன் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு

ரூ.4.34 கோடியில் செயற்கை பவளப் பாறை திட்டம் துவக்கம்: புதுச்சேரி, காரைக்காலில் மீன் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு


ADDED : ஏப் 17, 2025 04:47 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி கடலில் 4.34 கோடி ரூபாய் செலவில் செயற்கை பவளப் பாறைகளை கடலில் இறக்கும் திட்டம்மத்திய அரசின் நிதியுதவியுடன் துவக்கப்பட்டுள்ளது.

கடலில் பல்லுயிர்கள் தழைக்கும் நிலை தொடர பவளப் பாறைகள் மிகவும் முக்கியமானவை. இந்த பவளப் பாறைகள் என்பது ஒரு வகையான கடல் வாழ் உயிரினங்கள் அடங்கிய வாழ்விடம்.

கடலில் ஆழம் குறைந்த, சூரிய வெளிச்சம் அதிகம் கிடைக்கும் பகுதிகளில் இவை வளர்கின்றன. கடலில் நீரோட்டத்தை கட்டுப்படுத்தி, சிறு மீன்கள் ஒளிவதற்கான இடங்களை இவை ஏற்படுத்துவதால், பல வகையான கடல் வாழ் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு, பவளப் பாறைகள் உதவியாக உள்ளன. இதனால் இங்கு, வீசப்படும் மீனவர் வலைகளில் ஆயிரக்கணக்கான மீன் வகைகள் கிடைக்கின்றன.

புதுச்சேரி கடல் பகுதியில் இது போன்ற பெரிய பவளப்பாறைகள் இல்லாத சூழ்நிலையில், மீனவர்கள் மீன்களை தேடி கடலில் வலைகளுடன் பல கடல் மைல் தொலைவிற்கு அலைய வேண்டியுள்ளது. எனவே, பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் செயற்கையாக பவளப் பாறைகளை நிறுவ புதுச்சேரி அரசின் மீன்வளத் துறை திட்டமிட்டு, மத்திய அரசினை அணுகியது.

மத்திய மீன்வளத் துறை அமைச்சகமும் இத்திட்டத்திற்கு ஒப்புதலுடன் 100 சதவீத நிதியை ஏற்றுக்கொண்டது. அத்துடன், புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோரப் பகுதிகளில் மீன்வளத்தை மேம்படுத்த முதல் கட்டமாக 14 இடங்களில் செயற்கை பவளப்பாறைகளை நிறுவுவதற்காக மத்திய அரசு 4 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி வழங்கியது. புதுச்சேரி கடல் பகுதியில் 3.10 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட உள்ள 10 செயற்கை பாறை திட்டத்தை மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, புதுச்சேரி வைத்திக்குப்பம் கடல் பகுதியில் செயற்கை பவளப் பாறை அமைக்க ராட்சத கான்கிரீட் பாறைகள் விசைபடகில் கொண்டு செல்லப்பட்டு இறக்கப்பட்டன. இதே காரைக்கால் பகுதியில் நான்கு இடங்களில் செயற்கை பவளப் பாறைகள் அமைக்கும் பணியும் துவங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு செயற்கைப் பாறை தொகுப்பும் 0.17 ஹெக்டேர் பரப்பளவை கொண்டுள்ளது. இதற்காக ஒரு செயற்கை பவளப் பாறைகள் அமைக்க 250 கான்கிரீட் பாறைகள் கடலில் கொட்டப்பட உள்ளன. செயற்கை பவளப்பாறை பயன்படுத்தல் ஆழம் 20 மீட்டர் வரை இருக்கும். இங்கு 30 எப்.ஆர்.பி., படகுகள், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் கிட்டத்தட்ட 100 மீனவர்கள் மீன்கள் பிடிக்க முடியும்.

புதுச்சேரி 24 கி.மீ நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது, இது 15 கடலோர கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு 12,000 மீனவர்கள் முதன்மை ஆதாரமாக கடலையே நம்பியுள்ளனர். பாரம்பரிய மீனவர்கள் கடற்கரையிலிருந்து 10 கி.மீ.க்குள் உள்ள பகுதியில் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெறுகிறார்கள். புதுச்சேரி மாநிலத்தினை பொருத்தவரை புதுச்சேரியில்-20376.50 மெட்ரிக் டன், காரைக்கால்-5079, மாகி-5495, ஏனாம்-2952 என மொத்தம் 33902.50 மெட்ரிக் டன் மீன்கள் ஆண்டுக்கு பிடிக்கப்படுகின்றது.

செயற்கை பவளப் பாறைகள் கடலில் இறக்கும்போது கடலில் பல்லுாயிர் சூழல் அதிகரிக்கும். இந்த செயற்கை பவளப்பாறைகளை மீன்கள் மறைவிடமாக பயன்படுத்தி இனப்பெருக்கம் செய்து மீன்வளத்தினை பல மடங்காக பெருக்கும். இதனால் பல மெட்ரிக் டன் மீன்கள் புதுச்சேரியில் கூடுதலாகவே பிடிக்கப்பட்டு, உள்ளூர் தேவைக்கு போக, ஏற்றுமதி செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது.

மீனவர்களுக்கு நேரடி விளக்கம்

பொதுவாக கடல் திட்டங்களுக்கு கடுமையாக எதிர்ப்பு எழும்பும். ஆனால் செயற்கை பவளப்பாறை திட்டத்தை முழு மனதுடன் மீனவர்கள் ஏற்றுக்கொண்டனர். புதுச்சேரிக்கான செயற்கைப் பாறை தொகுதிகளின் கட்டுமானம் கடலூரிலுள்ள பச்சாங்குப்பத்தில் பொதுப்பணித் துறை மூலம் செய்யப்படுகிறது. எனவே, மீனவர்கள் செயற்கைப் பாறை தொகுதிகள் வார்க்கப்பட்ட இடத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் மீனவர்கள் செயற்கைப் பாறை தொகுதிகள் தயாரிப்பில் ஈடுபட்ட நிபுணர்களுடன் நேரடி தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தந்ததால் இப்போது சாத்தியமாகியுள்ளது. செயற்கைப் பாறைகளும் மீன்கள் வாழ்வதற்கும் வளருவதற்குறிய சூழலை வழங்குகின்றன. கடற்கரைகளில் அலை சேதத்தைக் குறைக்கின்றன, கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் மீளுருவாக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்குகின்றன என இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக மீனவர்களும் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us