/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரும்பார்த்தபுரம் - நுாறடிச்சாலை பைபாஸ் மேலும் 4 மீட்டர் அகலப்படுத்தப்படும்
/
அரும்பார்த்தபுரம் - நுாறடிச்சாலை பைபாஸ் மேலும் 4 மீட்டர் அகலப்படுத்தப்படும்
அரும்பார்த்தபுரம் - நுாறடிச்சாலை பைபாஸ் மேலும் 4 மீட்டர் அகலப்படுத்தப்படும்
அரும்பார்த்தபுரம் - நுாறடிச்சாலை பைபாஸ் மேலும் 4 மீட்டர் அகலப்படுத்தப்படும்
ADDED : டிச 16, 2024 05:07 AM
புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் - நுாறடிச்சாலை புறவழிச்சாலை மேலும் 4 மீட்டர் அகலப்படுத்தப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில்,அரும்பார்த்தபுரம் முதல் இந்திரா சிக்னல் வரையிலான சாலையை அகலப்படுத்த முடியவில்லை.
இதனால் தினசரி காலை மாலை நேரத்தில் இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனை தவிர்க்கும் விதமாக, அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து புதுச்சேரி நுாறடிச்சாலையை இணைக்கும் வகையில் 4.5 கி.மீ., துாரத்திற்கு புறவழிச்சாலை (பைபாஸ்) ரூ. 30 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.
தலா 15.6 மீட்டர் அகலத்தில் சென்டர் மீடியன் கட்டையுடன் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 95 சதவீத பணிகள் முடிந்துள்ளதால் தற்போது வாகன போக்குவரத்தும் துவங்கி விட்டது. சிறு சிறு பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது.
பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறுகையில்; அரும்பார்த்தபுரம் பைபாஸில் இரு புறமும் மின் விளக்குகள் பொருத்த தனி டெண்டர் விடப்பட உள்ளது.
இதுதவிர, சென்டர் மீடியன் மற்றும் சாலையோரம் ரிப்லக்டர்கள் பொருத்தப்படும். தற்போது ஒரு பக்கத்திற்கு 7.5 மீட்டர் அகலம் வீதம் மொத்தம் 15 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இது ஸ்டாண்டர்டான அகலம். இது எதிர்காலத்திற்கு போதுமானாதாக இருக்காது. அதனால், இரு பக்கமும் தலா 2 மீட்டர் சாலையை அகலப்படுத்தவும், 1 மீட்டர் அகலத்திற்கு வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட உள்ளது.
இதுதவிர, நுாறடிச்சாலை மேம்பாலத்தில் பைபாஸ் சாலை இணையும் இடத்தில் ஹைமாஸ் விளக்குடன் கூடிய ரவுண்டானா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.