/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 25ம் தேதி ஆஷாட நவராத்திரி விழா
/
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 25ம் தேதி ஆஷாட நவராத்திரி விழா
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 25ம் தேதி ஆஷாட நவராத்திரி விழா
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 25ம் தேதி ஆஷாட நவராத்திரி விழா
ADDED : ஜூன் 20, 2025 02:46 AM
புதுச்சேரி : பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் வரும் 25ம் தேதி ஆஷாட நவராத்திரி விழா துவங்குகிறது.
புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், இரும்பை டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில், அம்பாளின் படை தளபதியாக விளங்கிய சப்த மாதாக்களின் ஒருவரான வாராகி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.
திருமாலின் அவதாரமான வாராகி அம்மனுக்கு வரும் 25ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதிவரை ஆஷாட நவராத்திரி பூஜை நடக்கிறது. அதனையொட்டி வரும் 25ம் தேதி கலசம் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடைபெறும்.
மறுநாள் 26ம் தேதி முதல் 4ம் தேதிவரை தினமும் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
மேலும், இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவில் வாராகி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை உபயம் செய்ய விரும்பும் பக்தர்கள் 94432 50153 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.