/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதவியாளர் பணி 2ம் நிலை தேர்வு முடிவு வெளியீடு 93.50 மதிப்பெண் பெற்று இரு மாணவிகள் முதலிடம்

ADDED : ஜூன் 25, 2025 03:18 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசின் உதவியாளர் பணிக்கான இரண்டாம் நிலைக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில், 256 உதவியாளர் பணிக்கு, 32 ஆயிரத்து 692 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு ஏப்ரல் 27ம் தேதி நடந்த முதல்நிலை தேர்வை 22 ஆயிரத்து 860 பேர் எழுதினர். இதன் முடிவு ஏப்ரல் 30ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், 10,766 பேர் இரண்டாம் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
இவர்களுக்கான இரண்டாம் நிலை தேர்வு கடந்த 22ம் தேதி நடந்தது. அதில், 10,416 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வின் முடிவு நேற்று இரவு வெளியிடப்பட்டது. அதில் ஆண்கள் 164 பேர், பெண்கள் 92 பேர் என மொத்தம் 256 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இத்தேர்வில் 93.50 மதிப்பெண் பெற்ற புதுச்சேரியை சேர்ந்த மாணவி வைஷ்ணவி பொதுப் பிரிவிலும், மாணவி மதனா எம்.பி.சி., பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். பிரேம்குமார் 89 மதிப்பெண் பெற்று எம்.பி.சி., பிரிவிலும், வித்யாஷா 89 மதிப்பெண் பெற்று ஓ.பி.சி., பிரிவிலும், வசந்த் 88.75 மதிப்பெண் பெற்று இ.பி.சி., பிரிவிலும், ஆஷிப்மீரான் 81.25 மதிப்பெண் பெற்று பி.சி.எம்., பிரிவிலும், பிருத்திவிராஜன் 90 மதிப்பெண் பெற்று எஸ்.சி., பிரிவிலும், கீர்த்தியா 54 மதிப்பெண் பெற்று எஸ்.டி., பிரிவிலும், ஹரிஹரன் 68 மதிப்பெண் பெற்று பி.டி., பிரிவிலும், பிரபுதுலா வீரபாபு 90.25 மதிப்பெண் பெற்று இ.டபுள்யூ.எஸ்., பிரிவில் முதல் இடங்களை பிடித்துள்ளனர்.