ADDED : ஆக 25, 2025 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
மேட்டுப்பாளையம், வழுதாவூர் சாலையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 70. இவர், அதே பகுதியில் பாஸ்ட் புட், பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 6:30 மணியளவில், இவரது கடை அருகில் கடை நடத்தும் ராஜேந்திரன், 45, என்பவர், ராதாகிருஷ்ணனை தாக்கி, அவரது பழக்கடை வண்டியை வாய்காலில் தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தார். ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், ராஜேந்திரன் மீது மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.