/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூலி தொழிலாளி தாக்கு : 3 பேர் கைது
/
கூலி தொழிலாளி தாக்கு : 3 பேர் கைது
ADDED : ஆக 06, 2025 11:24 PM
காரைக்கால்: காரைக்காலில் மாடு ஒன்று வீட்டு தோட்டத்தை சேதப்படுத்தியதை தட்டிக்கேட்டவரை தாக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் நிரவி மேலஓடுதுறை அந்தோனியார் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரது மாடு நடராஜன் வீட்டு தோட்டத்தில் செடி கொடிகளை சேதப்படுத்தியுள்ளது.
இதை நடராஜன் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ஜோசப், 45 ; இவரது மனைவி ரூபி நிர்மலா மேரி, 42; மகன் ஜேகப்பிரதீப்ராஜ், 24; ஆகியோர் ஆபாசமாக திட்டி நடராஜனை தாக்கினர். புகாரின் பேரில் நிரவி போலீசார் ஜோசப் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனர்.