/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சபரிமலை செல்லும் பக்தர்கள் மீது தாக்குதல் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
/
சபரிமலை செல்லும் பக்தர்கள் மீது தாக்குதல் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மீது தாக்குதல் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மீது தாக்குதல் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
ADDED : ஜன 07, 2024 05:02 AM
சபரிமலை சென்ற தமிழகம் மற்றும் புதுச்சேரி பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து, புதுச்சேரி பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் வீரராகவன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
அதில், கேரள மாநிலம், சபரிமலையில் தரிசனத்திற்கு சென்ற தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களை ஐயப்பன் கோவில், பதினெட்டாம் படி அருகே அம்மாநில போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில், காயமடைந்த தஞ்சாவூர் பக்தர் ஒருவர் சன்னிதானம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொடுமையான மனித உரிமை மீறல் பிரச்னை குறித்து டில்லியில் உள்ள மத்திய அரசின் தேசிய மனித உரிமை ஆணையத்தின் சேர்மன் ஜஸ்டிஸ் அருண்குமார் மிஸ்ராவிற்கு, புகார் அனுப்பி இருக்கிறேன்.
கேரள போலீசாரின்தேவையில்லாத கேள்விகளால் நாள்தோறும் சராசரியாக, பக்தர்கள் 10 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நெரிசலால் பக்தர்கள் மயக்கமடைந்து உடல்நிலை பாதிப்பும் அதிகரித்துள்ளது.
அங்கு பாதுகாப்பு பணியில் உள்ளபோலீசார் சரமாரியாக பக்தர்களை தாக்கி உள்ளனர்.
இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாமி கும்பிட வரும், அப்பாவி பக்தர்களை முறைப்படி திட்டமிட்டு நெரிசலை குறைத்து செயல்படுத்த முடியாத கேரள அரசு பக்தர்களை கடுமையாக தாக்குவது மனித உரிமை மீறல் மற்றும்பாரபட்ச அணுகுமுறை.
இதுகுறித்து டில்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டின் சட்ட பணிகள் கமிட்டியின் சேர்மன் நீதிபதி கவாய்க்கும் மெயில் மூலம் புகார் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.