ADDED : டிச 12, 2024 08:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்; புதுச்சேரி தந்தை பெரியார் நகரை சேர்ந்த ராஜேஷ்குமார், ஆரோவில் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனு;
இரும்பை வருவாய் கிராமம், இடையஞ்சாவடி கிராமத்தில் 2.81 சென்ட் நிலம் எனக்கு உள்ளது. நேற்று முன்தினம் 10 பேர் கொண்ட கும்பல், எங்களுக்கு சொந்தமான சொத்தில் உள்ள காம்பவுண்ட் சுவரில் பூட்டை அறுத்து எடுத்துவிட்டனர்.
எனது நிலத்தை அபகரிக்க பல வகையில் எனக்கு தொந்தரவு அளித்து வருகிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக, அந்த கும்பலை துாண்டிவிடும் புதுச்சேரி அரசியல் பிரமுகர் மீதும், அவரின் அடியாட்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இது தொடர்பாக ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

