/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரவிந்தர் 153வது பிறந்த நாள் ஆரோவில்லில் நாளை 'போன் பயர்'
/
அரவிந்தர் 153வது பிறந்த நாள் ஆரோவில்லில் நாளை 'போன் பயர்'
அரவிந்தர் 153வது பிறந்த நாள் ஆரோவில்லில் நாளை 'போன் பயர்'
அரவிந்தர் 153வது பிறந்த நாள் ஆரோவில்லில் நாளை 'போன் பயர்'
ADDED : ஆக 14, 2025 01:21 AM
புதுச்சேரி : அரவிந்தரின் 153வது பிறந்த நாளை யொட்டி, ஆரோவில்லில் 'போன்பயர்' நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
அரவிந்தரின் பிறந்த நாள் விழா ஆரோவில் சர்வதேச நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அரவிந்தரின் 153வது பிறந்த நாளான நாளை சுதந்திர தினத்தன்று ஆரோவில்லில் உள்ள ஆம்பி தியேட்டரில் அதிகாலை 4:45 முதல் 6:30 மணி வரை 'போ ன்பயர்' நிகழ்ச்சி (மூட்டப்பட்ட தீயை சுற்றி அமர்ந்து அமைதியாக தியானம் செய்தல்) மற்றும் கூட்டு தியானம் நடக்கிறது.
அதேபோன்று புதுச்சேரி ஒயிட் டவுன் மரையின் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் ஆக., 15ம் தேதி காலை 6:00 மணிக்கு ஆசிரமவாசிகளின் கூட்டு தியானம், தொடர்ந்து ஆசிரமத்தில் உள்ள அரவிந்தர் அறை பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.
பக்தர்கள் ஆசிரமம் பின்பக்க வழியாக வரிசையில் வந்து அமைதியான முறையில் அரவிந்தர் அறையை தரிசனம் செய்யலாம். இதேபோன்று புதுச்சேரி வைசியால் வீதியில் அரவிந்தர் முதல், முதலில் புதுச்சேரி வந்து தங்கிய வீட்டில் உள்ள அறையை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.