/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டோ ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு
/
ஆட்டோ ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு
ADDED : ஜூலை 20, 2025 09:45 PM

பாகூர் : பிள்ளையார்குப்பத்தில் எவர்கிரீன் ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
நலச்சங்க செயலாளர் சக்திவேல் வரவேற்றார். தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் பிரகாஷ், கவுரவ தலைவர் பாரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பிள்ளையார்குப்பம் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் நடராஜன், பாலகுரு ஆகியோர் பெயர் பலகையை திறந்து வைத்தனர்.
விழாவில், துணை தலைவர் சுரேந்தர், துணை செயலாளர் சுரேஷ், செயற்குழு உறுப்பினர்கள் கமலக் கண்ணன், பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொருளாளர் தமிழ் செல்வன் நன்றி கூறினார். விழாவையொட்டி, சுற்றுச்சூழல் மற்றும் பசுமையை பாதுகாக்கும் நோக்கில், பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.