/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் அரசு நடுநிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா
/
பாகூர் அரசு நடுநிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா
ADDED : பிப் 05, 2024 05:31 AM

பாகூர் : பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளி மாணவர்கள், மாநில அளவிலும், பள்ளி அளவிலும் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். ஆசிரியர் துரைசாமி கருத்துரையாற்றினார். ஆசிரியர் செல்வகுமார் தொகுப்புரையாற்றினார். விழாவையொட்டி, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பிரபாவதி, சத்தியவதி, தம்பி ராஜலட்சுமி, சங்கீதா, மஞ்சு, கார்த்திகேயன், ரம்யா ஆகியோர் செய்திருந்தனர்.
எட்டாம் வகுப்பு மாணவன் கோவலன் நன்றி கூறினார்.

