/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருப்பட்டினம் ஸ்டேஷனுக்கு விருது
/
திருப்பட்டினம் ஸ்டேஷனுக்கு விருது
ADDED : ஆக 17, 2025 10:40 PM

காரைக்கால் : சுதந்திர தின விழாவில் காரைக்கால் திருப்பட்டினம் சிறந்த போலீஸ் ஸடேஷனுக்கான விருதை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
காரைக்கால் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சிறந்த போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டு இதற்கான விருது சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. இதன்படி திருப்பட்டினம் போலீஸ் ஸ்டேஷன் 2024ம் ஆண்டிற்கான சிறந்த ஸ்டேஷனாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருது மற்றும் ரூ.25ஆயிரம் ரொக்கப் பரிசை புதுச்சேரியில் நடந்த சுதந்திரதினவிழாவில் முதல்வர் ரங்கசாமி, திருப்பட்டினம் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் முருகனிடம் வழங்கினார்.
விருது பெற்ற போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு சீனியர் எஸ்.பி.,லட்சுமி செஜன்யா, எஸ்.பி.,சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் கிரிஸ்டிபால் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.