/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு
/
சாலை விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு
ADDED : அக் 30, 2024 05:03 AM

புதுச்சேரி : புதிய ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களுக்கு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து, சீனியர் எஸ்.பி, அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
புதிய ஓட்டுனர் உரிமம் பெற்ற இளைஞர்கள், மாணவர்களுக்கு, போக்கு வரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, கிழக்கு பகுதி போக்குவரத்து எஸ்.பி., அலுவலத்தில் நடந்தது. போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவின்குமார் திரிபாதி தலைமை தாங்கினார்.
இன்ஸ்பெக்டர்கள், நாகராஜன், கோகுலகிருஷ்ணன் உட்பட போக்குவரத்து போலீசார், பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து, விதிமுறைகள் குறித்து, துண்டு பிரசுரம், வழங்கி, எஸ்.பி.,பேசுகையில், 'சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், கட்டாயம் ெஹல்மெட் அணிந்து பைக்கை ஓட்ட வேண்டும். பைக்கில், அதிக வேகத்தில் செல்ல கூடாது.
மூன்று பேர் அமர்ந்து செல்வதை தவிர்க்க வேண்டும். ஒரு வழிப்பாதையில் செல்ல கூடாது. பஸ் படிகட்டில் நின்று பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும்.
பெற்றோர் தாங்கள் பிள்ளைகள் பைக்கில் வெளியில் செல்லும் போது, ஹெல்மெட் அணிந்து செல்ல வலியுறுத்த வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார்.