ADDED : செப் 21, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சுற்றுப்புற துாய்மை குறித்து நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஊர்வலத்தை மண்ணா டிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சரவணன், உதவிப் பொறியாளர் மல்லிகார்ஜூனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுப்புற துாய்மை பாதுகாப்பு, பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்போம், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவோம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை கையில் ஏந்தி மாணவ, மாணவிகள் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக சென்றனர்.
ஆசிரியர்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கலந்துகொண்டனர்