ADDED : ஜன 26, 2026 04:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், கிராம சபை விழிப்புணர்வு ஊர்வலம் கரியமாணிக்கத்தில் நடந்தது.
விழிப்புணர் ஊர்வலத்திற்கு மென்டர் ரெசினா, சோபியா, கிராம சேவகர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நுாற்றுக்கு மேற்பட்ட மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கரியமாணிக்கம் முக்கிய வீதிகள் வழியாக சென்று, கிராமசபை குறித்த கருத்துக்கள் தெரிவித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து ஒலிபெருக்கி, துண்டு பிரசுரம், பாடல்கள், பட்டிமன்றம் மூலம் பொதுமக்களுக்கு கிராம சபை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஏற்பாடுகளை சமூக வல்லுனர் அம்பிகா, பிரிய தர்ஷினி, ஆனந்தி, ராஜலட்சுமி, சசிகலா, சபரி ஆகியோர் செய்திருந்தனர்.

