/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுத்துக்கேணி பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
சுத்துக்கேணி பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 19, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: சுத்துக்கேணி அரசு உயர் நிலைப்பள்ளியில் உலக ஓசோன் நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் அமுல்ராஜ் லீமாஸ் தலைமை தாங்கினார். கலை இலக்கிய மன்ற பொதுச் செயலாளர் பாலகங்காதரன், ஓசோன் படலம் மெலிந்து உள்ளதால், புறஊதா கதிர்கள் எளிதில் உள்ளே நுழைந்து விடுகிறது. ஆகையால், ஓசோனைச் சிதைக்கும் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என பேசினார். சமுதாய நலப்பணித் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஓசோன் படலத்தை பாதுகாப்பது குறித்து மாணவர்கள் உறுதிமொழியேற்றனர்.