ADDED : ஆக 15, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்:காரைக்கால் நெடுங்காடு குரும்பகரம் காமராஜர் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில், புகையிலை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் விவேகானந்தன் தொடங்கி வைத்தார். நாடகத்தில் ஜெயசீலன், சிவசக்தி, சுதர்சனன், சர்வேஸ்வரன், ஸ்ரீமதி, பிரேமலதா, சஹானா உள்ளிட்ட மாணவர்கள் புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்.
நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் ராமன், அருள் பிரியா, அருண்குமார் உள்ளிட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.