ADDED : செப் 21, 2025 11:20 PM

புதுச்சேரி: புதுச்சேரி, தேசிய மனநல திட்டம் சார்பில் 'வாக்கத்தான்' தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி காந்தி சிலை அருகே நேற்று நடந்தது.
தேசிய மனநல திட்டத்தின் நோடல் அதிகாரி பாலன் பொன்மணி ஸ்டீபன், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மனநலத் துறை தலைவர் மதன் ஆகியோர் வாக்கத்தானை துவக்கி வைத்தனர். மனநல டாக்டர்கள் அரவிந்தன், வித்யா முன்னிலை வகித்தனர்.
காந்தி சிலை அருகே துவங்கிய, வாக்கத்தான் டூப்ளே சிலை வரை சென்று, மீண்டும் காந்தி சிலையில் முடிவடைந்தது.
தொடர்ந்து, தற்கொலை தடுப்பு மாதத்திற்கான ரீல்ஸ் மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லுாரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளை சேர்ந்தமாணவ, மாணவிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மனநல ஆலோசகர் ராஜா, செவிலியர்கள் கீதா, பிரியதர்ஷினி, தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் பார்த்திபன், அருண், ஞானசேகர், ஜீவா, சுகந்தா, கார்த்திகா ஆகியோர் செய்திருந்தனர்.