/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அலையாத்தி காடுகள் தினம் வி ழிப்புணர்வு பயிற்சி
/
அலையாத்தி காடுகள் தினம் வி ழிப்புணர்வு பயிற்சி
ADDED : ஜூலை 29, 2025 07:32 AM

புதுச்சேரி : பாண்டி மெரினா கடற்கரையில் உலக அலையாத்தி காடுகள் தினத்தை முன்னிட்டு, மீண்டும் காடு வளர்ப்பு, அலையாத்தி காடு மரங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த காடு வளர்ப்பு மற்றும் அலையாத்தி காடு மரங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சியில், ராக் கல்லுாரி தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட கலந்து கொண்டனர்.
பயிற்சியின் நிறைவாக நேற்று வனத்துறை மற்றும் தாவரவியல் வல்லுநர் வாழ்முனி கிருஷ்ணமூர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், ஜீவராசி டிரஸ்டின் ராஜாவிற்கு, 'மாங்ரோவ்' காடுகளின் பாதுகாவலர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
காடு வளர்ப்பு மற்றும் அலையாத்தி காடு மரங்கள் விழிப்புணர்வு பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு  சான்றிதழ்களை ஜீவராசி டிரஸ்ட் நிறுவனர் மேத்தா தட்சிணாமூர்த்தி, மேத்தா சரஸ்வதி ஆகியோர் வழங்கினர். புதுச்சேரியில் உள்ள இந்த அலையாத்தி காடுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

