/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குறத்தி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
/
குறத்தி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED : மார் 11, 2024 05:34 AM

புதுச்சேரி, : புதுநகர் குறத்தி பரமேஸ்வரி அம்மன் கோவில் 39ம் ஆண்டு பிரமோற்சவத்தை முன்னிட்டு, பால்குட ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட சஞ்சீவிநகர் புதுநகரில் குறத்தி பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் 39ம் ஆண்டு பிரமோற்சவத்தை முன்னிட்டு, அமாவாசையான நேற்று பால்குட ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையொட்டி காலை 9;00 மணிக்கு, மகா யாக பூஜைகள் நடந்தது. பகல் 11;30 மணிக்கு, சஞ்சீவிநகர் குளத்துமேட்டில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் இருந்து குறத்தி பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பால் குட ஊர்வலம் நடந்தது.
திரளான பக்தர்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு உடை அணிந்து, பால் குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
திரவுபதியம்மன் கோவில் தெரு, திண்டிவனம் மெயின் ரோடு வழியாக சென்ற பால் குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. அம்மனுக்கு பால் அபிேஷகம் நடந்தது.

