/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலெக்டர் உத்தரவால் பேனர்கள் அகற்றம்
/
கலெக்டர் உத்தரவால் பேனர்கள் அகற்றம்
ADDED : அக் 26, 2025 03:15 AM

புதுச்சேரி: கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து, பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை, பொதுப்பணித்துறையினர் அதிரடியாக அகற்றினர்.
புதுச்சேரியில், பேனர் தடைச் சட்டம் அமலில் உள்ளது. இருப்பினும், பேனர் கலாசாரம் ஓய்ந்தபாடில்லை. சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி, அரசியல்வாதிகள் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்து முக்கிய சாலைகளில் பேனர் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதையொட்டி, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி புதுச்சேரியில் பேனர் வைக்க நேற்று முன்தினம் முதல் 15 நாட்களுக்கு தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையினர் நேற்று புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிரடியாக அகற்றினர். இருப்பினும், பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பல பேனர்கள் அகற்றப்படாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை.

