ADDED : அக் 17, 2026 02:28 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பாட்டு, பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
எல்லைப்பிள்ளைச்சாவடி, 100 அடி சாலையில் சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில் 52ம் ஆண்டு சாரதா நவராத்திரி சிறப்பு ஹோமங்கள் துவங்கி நடந்து வருகிறது. 6ம் நாளான நேற்று காலை 8:30 முதல் 10:30 மணி வரை சூக்த ஹோமம், 10:30 மணி முதல் 12:30 மணி வரை அஷ்ட லட்சுமி ஹோமம் நடந்தது.
மாலை சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு பாட்டு, நடனம், பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
