ADDED : அக் 17, 2026 02:26 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், 7ம் ஆண்டு சாரதா நவராத்திரி சத சண்டி மகா ஹோமம் லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், கடந்த 11ம் தேதி துவங்கி, வரும் 20ம் தேதி வரை நடக்கிறது.
ஆறாம் நாளான நேற்று காலையில் கோ பூஜை, அஸ்வ பூஜை, நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, பின் 108 திரவியங்களை கொண்டு யாகம் நடந்தது. பூர்ணாஹூதிக்கு முன்பாக பட்டு புடவை, தங்க திருமாங்கல்யம் ேஹாமத்தில் அர்ப்பணம் செய்யப்பட்டது.
சண்டி மகாதேவி மீனாட்சி அலங்காரத்தில் அருள்பாலித்தார். சங்கர் நாராயண பீடம் சுவாமி ஆசிகள் வழங்கினார். இசையமைப்பாளர் கங்கை அமரன் சுவாமி தரிசனம் செய்தார்.
மாலை ரெட்டியார்பாளையம் முரளி கான சபா மாணவர்களின் பாட்டு நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை தர்ம சம்ரக் ஷண சமிதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
