ADDED : ஏப் 13, 2026 04:05 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உருளையன்பேட்டை தனியார் ஒயின்ஷாப் எதிரே நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்த்த பைக் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, சேலியமேடு ஜானகிராமன் நகரை சேர்ந்தவர் பாரதி, 22; பெயிண்டர். இவர், நேற்று முன்தினம் தனது ரூ.2 லட்சம் மதிப்பிலான டியூக் 160 பைக்கில் (பி.ஓய் 05 வி.ஜி 8139) நண்பர்கள் கவுதம், தினகரன் ஆகியோருடன், உருளையன்பேட்டை மறைமலையடிகள் சாலையில் உள்ள தனியார் ஓயின்ஷாப்பிற்கு சென்றார். பைக்கை ஒயின்ஷாப் எதிரே நிறுத்திவிட்டு, உள்ளே சென்று திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பாரதி அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மாயமான பைக்கை தேடி வருகின்றனர்.
