நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் வாரச்சந்தையில் நிறுத்தியிருந்த பைக் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகூர் வண்ணான்குளம் மேல்கரை பகுதியை சேர்ந்தவர் ராமராஜ். இவர் கடந்த 6ம் தேதி நகராட்சி வாரச்சந்தையில் தனது பைக்கை நிறுத்தி விட்டு காய்கறி வாங்குவதற்கு சென்றார்.
பின்னர் வந்து பார்த்த போது பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பைக்கை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் நகர காவல் நிலையத்தில் போலீ சார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.