தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சரக்கு லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

சரக்கு லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

சரக்கு லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி


ADDED : செப் 22, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் அருகே சரக்கு லாரி மோதியதில் பைக்கில் சென்றவர் இறந்தார்.

நாகப்பட்டினம் , மியா தெருவைச் சேர்ந்த முகமது சலீம்,46; . இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் காரைக்கால், நாகை சாலையில் சென்று கொண்டிருந்தார். மேலவாஞ்சூர் தனியார் மதுபானக்கடை அருகே சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த சரக்கு லாரி சலீம் சென்ற பைக் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த முகமது சலீமை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

புகாரின் பேரில் திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார, தரங்கம்பாடி சின்ன மாணிக்க தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் ரவி, 36;மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us