தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தபால் ஓட்டும் பெறும் இடத்தில் காங்., நபர்கள் என்.ஆர்.காங்.,கட்சியினர் முறு்றுகையால் பரபரப்பு

தபால் ஓட்டும் பெறும் இடத்தில் காங்., நபர்கள் என்.ஆர்.காங்.,கட்சியினர் முறு்றுகையால் பரபரப்பு

தபால் ஓட்டும் பெறும் இடத்தில் காங்., நபர்கள் என்.ஆர்.காங்.,கட்சியினர் முறு்றுகையால் பரபரப்பு


ADDED : செப் 22, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 07:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தபால் ஓட்டு பெறும் இடத்தில் காங்., கட்சியை சேர்ந்த இருவர் இருந்ததால், என்.ஆர்., காங்., கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரியை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி,  தொகுதியில் மொத்தம் 105 தபால் ஓட்டுகள் உள்ளன. இதில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் தபால் ஓட்டு பதிவு செய்யும் பணி நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கியது.

இந்நிலையில், தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை மேட்டுத்தெருவில் பூத் எண் 21ல், தபால் ஓட்டும் பெறும் பணி நடந்தது. அப்போது, மதியம் 3:00 மணியளவில் 40 வயதுடைய ஆண் மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டில் தபால் ஓட்டு போடும் போது, காங்., கட்சியை சேர்ந்த ஒருவர் அந்த வீட்டில் இருந்து கொண்டு காங்., கட்சிக்கு ஆதரவாக ஓட்டு கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த  அப்பகுதியினர் திரண்டனர்.   

உடனடியாக அப்பகுதிக்கு, தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணன், தேர்தல்  துணை தாசில்தார் முத்துகுமரன் உள்ளிட்ட அதிகாரியை என்.ஆர்., காங்., வேட்பாளரின் ஆதரவாளர்கள் முருகன், அய்யப்பன், சதீஷ், ஹரி மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஜெயபாலன் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த லாஸ்பேட்டை போலீசார் தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்ட என்.ஆர். காங்., வேட்பாளரின் ஆதரவாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தபால் ஓட்டு போடும் இடத்தில் இருந்த காங்., நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரி கூறியதை அடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us