ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக சாய் சுதர்சன் அரைசதம்
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக சாய் சுதர்சன் அரைசதம்
ADDED : செப் 22, 2026 07:22 PM
புதுச்சேரி: துத்திப்பட்டு, சீகெம் மைதானத்தில் துவங்கிய இந்தியா– ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கான முதல் மல்டி டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் காயத்திலிருந்து திரும்பிய சாய் சுதர்தன் அரைசதம் அடித்தார்.
புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள சி.ஏ.பி., சீகெம் மைதானத்தில் இந்தியா– ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கான 4 நாட்கள் மல்டி டே டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது.
போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா ஏ அணி, முதல் நாள் ஆட்ட முடிவில், விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் தனுஷ் கோட்டியான் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் 6வது விக்கெட்டிற்கு, 138 ரன்கள் உதவியுடன் 257/5 என மீண்டது. இருவரும் அரைசதம் அடித்தனர்.
ஆஸ்திரேலியா அணியின் ஆப் -ஸ்பின்னர் கோரி ரொச்சிச்சியோலி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், சக ஆப் -ஸ்பின்னர் டாட் மர்பி காயமடைந்த சுதர்சனுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டு, சமீபத்தில் இலங்கை டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்த கேப்டன் தேவ்தத் படிக்கலை 3 ரன்களில், ஸ்லிப்பில் தனியாக நின்ற பீல்டரிடம் கேட்ச் கொடுக்கச் செய்தார்.
கேப்டன் தேவ்தத் படிக்கலை ஆட்டமிழக்கச் செய்ததான் மூலம் இந்தியா ஏ அணி 5 விக்கெட்களுக்கு 97 ரன்கள் எடுத்து தள்ளாடியது. காயத்திலிருந்து திரும்பிய சாய் சுதர்சன், தனது அணுகு முறையில் சிறப்பாக விளையாடி, மதிய உணவுக்குப் பிறகு ரொச்சிச்சியோலியின் பந்தில் ஒரு ரன் எடுத்து தனது அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து, அவரிடமே 103 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
இந்த மாத தொடக்கத்தில் துலீப் டிராபி இறுதிப்போட்டியில் சதம் அடித்த குஷாக்ரா, சிறிய காயத்தால் பாதிக்கப்பட்டு, 82 ரன்களில் காயம் காரணமாக ஓய்வு பெற்றார். அதேவேளை இந்திய அணிக்கான நம்பிக்கைக்குரிய கோட்டியான் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
சுருக்கமான ஸ்கோர்: இந்தியா ஏ அணி 89 ஓவர்களில் 257/5 (சாய் சுதர்சன் 57, குமார் குஷாக்ரா 82 காயம் காரணமாக ஓய்வு, தனுஷ் கோட்டியான் 68 ஆட்டமிழக்கவில்லை), ஆஸ்திரேலியா அணியின் கோரி ரொச்சிச்சியோலி 72 ரன்களுக்கு 3- விக்கெட்கள் விழ்த்தினார்.
