/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையில் கொட்டிய ஆயில் பைக்கில் சென்றவர்கள் காயம்
/
சாலையில் கொட்டிய ஆயில் பைக்கில் சென்றவர்கள் காயம்
ADDED : ஏப் 28, 2025 04:26 AM
புதுச்சேரி: லாரியில் இருந்து ஆயில் கொட்டி சென்றதால், பைக்கில் சென்றவர்கள் வழுக்கி விழுந்து காயமடைந்தனர்.
கடலுாரில் இருந்து காலாப்பட்டு தனியார் தொழிற்சாலைக்கு குருடாயில் ஏற்றி கொண்டு, நேற்று காலை 8:00 மணியளவில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இ.சி.ஆரில், கோட்டக்குப்பம் சந்திப்பு அருகே செல்லும்போது, லாரியின் பின் பக்க பைப்பில் இருந்து ஆயில் கொட்டியது. ஆயில் கொட்டியது தெரியாமல் டிரைவர் லாரியை 3 கி.மீ., துாரம் வரை லாரியை ஓட்டி சென்றார்.
லாரியை பின் தொடர்ந்து பைக்கில் சென்றவர்கள் வழுக்கி விழுந்து காயமடைந்தனர்.
அவ்வழியாக அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த பரமசிவம், காரில் சென்று கொண்டிருந்தார். முன்னால் சென்ற பைக் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்தார்.
அப்போது பின்னால் வந்த கார் மோதியது. காரை ஓட்டி வந்த பிரவீன் காயமடைந்தார்.
இதுகுறித்து, கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, நகராட்சி ஊழியர்கள் மூலம், சாலையில் ஆயில் கொட்டிய இடத்தில் மணல் கொட்டி சரி செய்தனர்.

