நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உழவர்கரை பஜனை மட வீதியை சேர்ந்தவர் தம்பிராஜ் பிஸ்கோ,31. இவர் தனது,பி.ஓ.01. பி.இசட் 9704 என்ற ேஹாண்டா ைஷன் பைக்கை, கடந்த 30ம் தேதி, பூமியான்பேட்டை துணிக்கடை அருகே நிறுத்தி விட்டு துணி எடுக்க சென்றார்.திரும்பி வந்த பார்த்தபோது, பைக் காணாமல் போயிருந்தது. பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து பைக்கை திருடிய சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

