நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பைக்கை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் இந்திரன், 27; படகு ஓட்டுனர்.
ரெட்டியார்பாளையத்தில் உள்ள படகின் உரிமையாளர் வீட்டின் முன், அவரது பைக்கை, கடந்த 8ம் நிறுத்தி விட்டு வெளியூர் சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது, பைக்கை காணவில்லை. அவரது புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து பைக் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.