ADDED : நவ 15, 2026 07:16 PM
அ நிறம் | அளவு
திருபுவனை: கலித்தீர்த்தால்குப்பம் மோகன் நகரை சேர்ந்தவர் பிரசாந்த், 33. இவர், தனது அண்ணனின் பைக்கை (பிஒய்.01.பிஎன்.9866) பயன்படுத்தி வந்தார். கடந்த ஆக., மாதம் தனது வீட்டின் முன் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றார். பின், திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.
அவர் அளித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
