sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பா.ஜ., தலைவர், அமைச்சர் முற்றுகை தொகுதி கிடைக்காததால் ஆவேசம்

/

 பா.ஜ., தலைவர், அமைச்சர் முற்றுகை தொகுதி கிடைக்காததால் ஆவேசம்

 பா.ஜ., தலைவர், அமைச்சர் முற்றுகை தொகுதி கிடைக்காததால் ஆவேசம்

 பா.ஜ., தலைவர், அமைச்சர் முற்றுகை தொகுதி கிடைக்காததால் ஆவேசம்


ADDED : மார் 22, 2026 06:12 AM

Google News

ADDED : மார் 22, 2026 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தே.ஜ., கூட்டணியில் உழவர்கரை தொகுதியை பா.ஜ.,விற்கு ஒதுக்காததை கண்டித்து மாநில தலைவர் மற்றும் அமைச்சரை, நிர்வாகிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரியில் உள்ள பல்வேறு கட்சிகள் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில், ஒவ்வொரு தொகுதியிலும் தங்களது வேட்பாளர்களை தயார் செய்து செல்வாக்கை பெருக்கி வருகிறது. அதன்படி, உழவர்கரை தொகுதியில் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளரான மாநில துணை தலைவர் சரவணன் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட தயாராகி வந்தார்.

இந்நிலையில், உழவர்கரை தொகுதி, கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதில், அதிருப்தி அடைந்த பா.ஜ., மாநில துணை தலைவர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்த ராஜிவ் சதுக்கம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் திரண்டு வந்து, மாநில தலைவர் ராமலிங்கத்தை முற்றுகையிட்டு, உழவர்கரை தொகுதியை பா.ஜ.,விற்கு வாங்கி கொடுத்து, தனக்கு சீட் வழங்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் மாநில தலைவர் ராமலிங்கம், தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. வேண்டுமானால், அமைச்சர் நமச்சிவாயத்தை பார்க்குமாறு கூறிவிட்டு, காரில் புறப்பட்டு சென்றார்.

உடன், ஓட்டலில் இருந்து வெளியே வந்த அமைச்சர் நமச்சிவாயத்தை, ஆதரவாளர்கள் வழி மறித்து சீட் வழங்கும்படி, காலில் விழுந்து கெஞ்சினர். அதில் டென்ஷன் ஆன நமச்சிவாயம், அவர்களை எச்சரித்துவிட்டு, இதுகுறித்து முதல்வரை சந்திக்க செல்வதாக கூறியபடி, காரில் ஏறி வேகமாக புறப்பட்டு சென்றார்.

பா.ஜ.,வினரே கட்சியின் தலைவர் மற்றும் அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us