UPDATED : அக் 17, 2026 06:50 PM
ADDED : அக் 17, 2026 06:46 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., சார்பில் பிரதமர் மோடியின், 25 ஆண்டு கால பொதுவாழ்வு சாதனையை முன்னிட்டு, இலவச மருத்துவ முகாம் நடந்தது.
கூனிச்சம்பட்டு சுதர்சன் மஹாலில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவுறுத்தலின்பேரில் நடந்த முகாமில் வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் பொது மக்களுக்கு, பொது மருத்துவம், இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான பரிசோதனைகள், உடல் நல பிரச்னை தொடர்பாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், மாவட்ட தலைவர் ஓம் அனிதா, மாநில செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள், தொகுதி பொறுப்பாளர் கண்ணன், மாவட்ட பொறுப்பாளர் வெற்றிச்செல்வம், சேகர், செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.
