தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தனலட்சுமி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

தனலட்சுமி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

தனலட்சுமி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு


ADDED : அக் 17, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2026 07:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 11ம் தேதி துவக்கி, வரும் 5ம் தேதி நடக்கிறது.

இதையொட்டி, தினமும் காலை மற்றும் இரவு சிறப்பு அபிேஷகம் மற்றும் அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் மாலை அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு தனலட்சுமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நேற்று மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், இரவு வேத சரஸ்வதி அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

முக்கிய நிகழ்வாக, நாளை 19ம் தேதி மாலை 5:00 மணிக்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, அம்மனுக்கு மகா சரஸ்வதி அலங்காரம் நடக்கிறது. 30ம் தேதி காலை 6:30 மணிக்கு சிறப்பு அபிேஷகம், 10:30 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 4ம் தேதி அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us