தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரூ. 270 கோடி மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கு: முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்; காரைக்கால் எஸ்.பி., தகவல்

ரூ. 270 கோடி மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கு: முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்; காரைக்கால் எஸ்.பி., தகவல்

ரூ. 270 கோடி மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கு: முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்; காரைக்கால் எஸ்.பி., தகவல்


ADDED : அக் 17, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2026 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் குறித்து வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தகவல் கேட்டால், முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என, சீனியர் எஸ்.பி.,வினய் குமார் காட்கே தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.270 கோடி எனக் கூறப்படுகிறது.

இவ்வழக்கில், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான பூபாலன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி காரைக்கால் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க போலீசார் நடத்திய ‘ஆபரேஷன் தண்டர்ஸ்ட்ரைக்’ நடவடிக்கையில் நகர போலீசார் காரைக்கால் மேட்டைச் சேர்ந்த நிஜந்தன், பாக்கியராஜ், ராஜேஷ் உள்ளிட்ட இலங்கையை சேர்ந்த 11 பேரை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

அவர்களிடம் ரூ.6.08 கோடி மதிப்புள்ள 1.438 கிலோ மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து காரைக்கால் சீனியர் எஸ்.பி.,வினய் குமார் காட்கே கூறுகையில், ‘நாகையில் போதைப்பொருள் பறிமுதல் வழக்குக்கும், காரைக்காலுக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை தெரியவில்லை. இந்த வழக்கு தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தில் இருந்து காரைக்கால் போலீசாருக்கு இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை.

வாஞ்சூரில் தனியார் துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதிகாரிகள் சோதனை நடத்துவது குறித்தும் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதிகாரிகள், காரைக்கால் போலீசாரிடம் தகவல் கேட்டால், முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us