ADDED : அக் 17, 2026 07:00 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், 7ம் ஆண்டு சாரதா நவராத்திரி விழாவையொட்டி, சத சண்டி மகா ஹோமம் நடந்தது.
புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், 7ம் ஆண்டு சாரதா நவராத்திரி விழா, கடந்த 11ம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் கோ பூஜையுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து நவராத்திரி பூஜை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம், ஆறாவது நாள் நிகழ்ச்சியில், இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, ஏழாவது நாள் நிகழ்ச்சியான நேற்று சத சண்டி மகா ஹோமம் நடந்தது.
அதில், அம்பாள் மாரியம்மன் ரூபத்தில் அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
