பா.ஜ., தேசிய பொது செயலாளருடன் புதுச்சேரி விஞ்ஞானி சந்திப்பு
பா.ஜ., தேசிய பொது செயலாளருடன் புதுச்சேரி விஞ்ஞானி சந்திப்பு
ADDED : செப் 27, 2026 11:33 PM
புதுச்சேரி: பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோைஷ புதுச்சேரி விஞ்ஞானி லட்சுமி சந்தித்து அவர் கண்டுபிடித்து மிளகு செடியை அறிமுகப்படுத்தினார்.
புதுச்சேரி விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி; கூடப்பாக்கத்தில் தனது நிலத்தில் மிளகு சாகுபடி செய்து வருகிறார். இவர் புதுவகையான மிளகு செடி கண்டுபிடித்துள்ளார். அதாவது அரசு, தனியார் பண்ணைகள் மூலம் கொடுக்கிற மிளகு நாற்றுகள் 30 அடி உயரம் வளர்வதால், அதன் முதல் காய்ப்பே 5 வருஷம் கழிச்சுதான் வரும். உருப்படியான மகசூல் வர 6 வருஷம் ஆகிறது. இதனால் மைக்ரோப்ரோபகேஷன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நோய் தாக்குதல் இல்லாத உயர்தர நாற்றுகளை உருவாக்கியுள்ளார். இந்த நாற்று மாசத்துக்கு 1 அடி வீதம் வேகமா வளரும். இந்த செடி, 12 அடி வளர்ந்தாலே போதும். நட்ட 1 வருஷம் 8 மாசத்துலயே அறுவடைக்கு வந்துடும். இதற்காக பிரதமருக்கு பிரமாண பத்திரம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் நேற்று புதுச்சேரி வந்த பா.ஜ., தேசிய அமைப்பு பொது செயலாளர் சந்தோைஷ பா.ஜ., தலைமை அலுவலகத்தில் சந்தித்து விஞ்ஞானி லட்சுமி பேசினார்.
அப்போது அவரது புது செடியை சந்தோஷிடம் அறிமுகப்படுத்தினார். இந்த செடியை இந்தியா முழுதும் அறிமுகப்படுத்த பிரமரிடம் தெரிவித்து அனுமதி வாங்கி தர வேண்டும் என, கோரிக்கை வைத்தார். நடவடிக்கை எடுப்பதாக சந்தோஷ் தெரிவித்தார். அப்போது பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
