தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மக்கள் நலனைவிட பதவி தான் முக்கியம் காங்., - தி.மு.க., மீது பா.ஜ., மாநில தலைவர் பாய்ச்சல்

 மக்கள் நலனைவிட பதவி தான் முக்கியம் காங்., - தி.மு.க., மீது பா.ஜ., மாநில தலைவர் பாய்ச்சல்

 மக்கள் நலனைவிட பதவி தான் முக்கியம் காங்., - தி.மு.க., மீது பா.ஜ., மாநில தலைவர் பாய்ச்சல்


ADDED : மார் 09, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 04:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் யார் தலைமையில் ஆட்சி என, காங்., தி.மு.க., இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது என, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.

பா.ஜ., அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அவர், கூறியதாவது:

முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு, புதுச்சேரி இளைஞர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது. 22 ஐடி நிறுவனங்களுடன் கைகோர்த்து, 147 பட்டதாரி இளைஞர்களுக்கு உடனே இன்டர்ன்ஷிப் ஆணைகளை வழங்கியுள்ளது.

விரைவில் அமையவுள்ள ஐ.டி., பார்க் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் ரூ. 4,750 கோடியில் மாநிலம் முழுவதையும் நவீனப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். ரூ.4,500 கோடியில் விமான நிலையத்தை விரிவுபடுத்துகிறோம். ஓடுதளத்தை 2,500 மீட்டராக உயர்த்தி, பெரிய ரக ஏர் பஸ் விமானங்கள் வந்து செல்ல வழிவகை செய்கிறோம். இதற்காக நிலம் கையகப்படுத்தவே ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மரக்காணம் - புதுச்சேரி இடையிலான சாலை ரூ.2,200 கோடியில் நான்கு வழிச்சாலையாக மாறும். பெண்களுக்கு 75 சதவீத மானியத்தில் இ-பைக் மற்றும் தாய்மார்களுக்கு ரூ.12,000 உதவித்தொகை என எளிய மக்களுக்கான அரசாகத் திகழ்கிறது.

காங்., மற்றும் தி.மு.க., தலைவர்கள் இப்போதே 'யார் தலைமையில் ஆட்சி என மோதிக் கொள்கின்றனர். காங்., தலைமையில் தான் ஆட்சி என மேலிட பொருப்பாளர் கிரிஷ் சோடேங்கர் கூறியுள்ள நிலையில், எங்கள் தலைமையில் தான் ஆட்சி என, தி.மு.க., அமைப்பாளர் சிவாவும் கூறுகிறார். அவர்களுக்கு மக்கள் நலனை விடப் பதவி தான் முக்கியம். இவர்களது சந்தர்ப்பவாதக் கூட்டணி. மக்கள் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்வு செய்வர்' என்றார். செய்தி தொடர்பாளர் அருள் முருகன் உடனிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us