புதுச்சேரியில் 1–ம் எண் புயல் கூண்டு துறைமுகத்தில் படகுகள் நிறுத்தம்
புதுச்சேரியில் 1–ம் எண் புயல் கூண்டு துறைமுகத்தில் படகுகள் நிறுத்தம்
UPDATED : நவ 16, 2026 08:31 PM
ADDED : நவ 16, 2026 08:26 PM
புதுச்சேரி: வங்கக்கடலில் உருவான 'அக்வான்' புயல் எதிரொலியாக மீன்வர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அக்வான்' புயலாக உருவெடுக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாக புதுச்சேரி கடலோரத்தில் பலத்த காற்று, கடல் சீற்றம், கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து மீனவர்கள் தேங்காய்திட்டு துறைமுகத்தில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைத்துள்ளனர்.
