/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
/
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
ADDED : மே 20, 2025 01:02 AM
புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் மாளிகை, முதல்வர் வீடு, ஜிப்மர் மருத்துவமனை, தனியார் ஹோட்டல்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அவ்வப்போது இ- மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கவர்னர் கைலாஷ்நாதன் சென்னை சென்றுள்ள நிலையில், நேற்று மாலை 4:20 மணி அளவில், கவர்னர் மாளிகைக்கு இ- மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
தகவலின்பேரில் எஸ்.பி.,ரகுநாயகம் தலைமையில் பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன், மோப்ப நாய் டோனி மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை நடத்திய சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதியானது.
நேற்று 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.