/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளி வீட்டில் வெடிகுண்டு வீச்சு
/
தொழிலாளி வீட்டில் வெடிகுண்டு வீச்சு
ADDED : ஜூன் 09, 2025 11:27 PM
காரைக்கால் : கம்பி பிட்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
காரைக்கால் கோவில்பத்து புதுதெருவை சேர்ந்தவர் மணிகண்டன்,30; கம்பி பிட்டர். நேற்று முன்தினம் விடியற்காலை இவரது வீட்டின் முன் வெடிகுண்டு சத்தம் கேட்டது. வெளியே வந்தபோது, பெட்ரோல் குண்டு வெடித்து தீ பிடித்து எரிந்தது.
புகாரின் பேரில் காரைக்கால் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., பதிவை ஆய்வு செய்தனர். அதில், 2 வாலிபர்கள், மணிகண்டன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது உறுதியானது.
விசாரணையில், இரு வாரங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை, வெளியூர் வாலிபர் ஒருவர் தாக்கினார். அதனை மணிகண்டன் கண்டித்தார்.
அதில் ஆத்திரமடைந்த வெளியூர் நபர், தனது நண்பருடன் சேர்ந்து மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்துள்ளது. அதன்பேரில் வெளியூர் நபர் உள்ளிட்ட இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.