ADDED : நவ 13, 2025 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: புதுச்சேரி பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்டம் குடிநீர் பிரிவு சார்பில், ரூ. 27 லட்சம் திட்ட மதிப்பில் வில்லியனுார் தில்லை நகரில் புதிய போர்வெல் அமைக்கும் பணிக்கு நேற்று காலைபூமி பூஜை நடந்தது.எதிர்க்கட்சித் தலைவர்சிவா, போர்வெல் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்ட உதவிப் பொறியாளர் பீனாராணி, உதவிப் பொறியாளர் திருவேங்கடம்,ஊர் முக்கியஸ்தர்கள் சந்துரு,ராஜேந்திரன், ரமேஷ்குமார், ஜெயராஜ், கன்னியப்பன் உட்பட பலர் உடனிருந்தனர்.

