தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கடற்கரையில் தவித்த சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

கடற்கரையில் தவித்த சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

கடற்கரையில் தவித்த சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு


ADDED : அக் 23, 2026 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 01:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: கடற்கரையில் தனியாக தவித்த சிறுவனை போலீசார் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பெங்களூருவை சேர்ந்தவர் கிேஷார்குமார், இவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். இவர் அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரைக்கு சென்று, தனது மனைவி, குழந்தைகளுடன் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே செல்பி மற்றும் போட்டோக்கள் எடுப்பதில் கவனம் செலுத்தினார்.

அப்போது குழந்தை தங்களுடன் தான் இருக்கிறது என்று நினைத்த கிஷோர்குமார், காரில் ஏறும் போது தனது 3 வயது மகன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பதட்டமடைந்த கிேஷார்குமார் தனியாக பிரிந்து சென்ற மகனை தேடி அலைந்து சென்றார்.

இந்நிலையில், கடற்கரை பகுதியல் சிறுவன் தனியாக நின்று அழுது கொண்டிருந்தான். ரோந்து பணியில் இருந்த கடலோர காவல்படை போலீசார் வரதராஜ பெருமாள் மற்றும் கான்ஸ்டபிள் சரண்ராஜ் ஆகியோர் சிறுவனை அணுகி விசாரித்தனர். சிறுவனுக்கு இந்தி மொழி மட்டுமே தெரிந்துள்ளது. சிறுவனைப் பாதுகாப்பாக வைத்த போலீசார் சிறுவனின் பெற்றோர் யார் என்பது பற்றி விசாரித்தனர். தொலைந்துபோன குழந்தையைத் தேடிக்கொண்டிருந்த கிஷோர் குமாரைக் கண்டறிந்து அரை மணி நேரத்திற்குள் போலீசார் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us