UPDATED : அக் 23, 2026 01:58 AM
ADDED : அக் 23, 2026 01:54 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் குணசீலன், 61; இவரது உறவினர் நேற்று முன்தினம் பைக்கில் அடிப்பட்டது தொடர்பாக வந்த தகவலை அடுத்து, கருவடிகுப்பம் பகுதிக்கு சென்றார்.
விபத்து குறித்து விசாரித்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்த, வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரிடம், ஏன் வாக்குவாதம் செய்கிறாய், என குணசீலன் கேட்டார்.
அதில், ஆத்திரமடைந்த, அவர் முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, குணசீலன் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் ஜெயராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
