sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தாய்ப்பால் ஊக்குவிப்பு ஆலோசனை திட்டம்: செவிலியர் குழுவிற்கு பாராட்டு

/

 தாய்ப்பால் ஊக்குவிப்பு ஆலோசனை திட்டம்: செவிலியர் குழுவிற்கு பாராட்டு

 தாய்ப்பால் ஊக்குவிப்பு ஆலோசனை திட்டம்: செவிலியர் குழுவிற்கு பாராட்டு

 தாய்ப்பால் ஊக்குவிப்பு ஆலோசனை திட்டம்: செவிலியர் குழுவிற்கு பாராட்டு


ADDED : பிப் 16, 2026 07:00 AM

Google News

ADDED : பிப் 16, 2026 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தாய்ப்பால் ஊக்குவிப்பு ஆலோசனை திட்டத்தை செயல்படுத்தி வரும் செவிலியர் குழுவினருக்கு, ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி பாராட்டு தெரிவித்தார்.

புதுச்சேரி ஜிப்மரில், தேசிய தரம் வாய்ந்த பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது. இங்கு, தாய்ப்பால் ஆலோசனை சேவைகளை வலுப்படுத்தும் பணியை ஜிப்மர் செவிலியர் துறை முன்னின்று மேற்கொண்டது.

அதனடிப்படையில், பிரிஸ்ட்பீடிங் புரோமோஷன் நெட்வொர் ஆப் இந்தியா பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, செவிலியர் சங்கம் புதுச்சேரி கிளையின் ஆதரவுடன், பயிற்சி திட்டம் வடிவமைப்பட்டது.

செவிலியர் மேலாளர் ஜேன்மேரி ஆண்ட்ரூ தலைமையிலான, செவிலியர் குழுவினர் மகளிர் மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவுகளிலும் நியமிக்கப்பட்டு, 24 மணி நேர தாய்ப்பால் ஆலோசனை சேவையை வழங்கி வருகின்றனர்.

இக்குழு, தாய்மார்களை தங்களது குழந்தைகளுக்கு முறையாக தாய்ப்பால் புகட்டுவதும், தாய்ப்பால் தேவைப்படும் பிற குழந்தைகளுக்கு தானமாக வழங்குவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இச்சேவையின் மூலமாக,ஜிப்மரின் “அமுதம் தாய்ப்பால் மையம் தினசரி பெறும் தாய்ப்பாலின் அளவு இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இச்சேவை, நோயுற்ற மற்றும் பேறு காலத்துக்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு பெரும் பயனை தரும்.

செவிலியர் குழுவின் தலைமையில்திட்டத்தை வெற்றிகரமாக வழி நடத்திய செவிலியர் குழுவினருக்கு, ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி பாராட்டு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us